நமக்குள் இருக்கும் சக்தியில் மிக சிறந்த மற்றும் மிக சக்தி வாய்ந்த சக்தி ஆழ்மனத்தின் சக்தி ஆகும். இதை நாம் உணர்ந்து இந்த சக்தியை நாம் வாழ்வில் பயன்படுத்த கற்றுகொண்டால் வாழ்வில் மிக பெரிய உயர்வை நாம் அடைய முடியும். வாழ்வில் பல இலட்சியத்தை நாம் அடைய முடியும்.
இந்த ஆழ்மனத்தின் சக்தியை எப்படி செயல்படுத்துவது? இதற்கு ஏதேனும் சாவி உள்ளதா? ஆம். நம் மனதின் ஆல்பா நிலைதான் இதற்கு சாவி ஆகும். தியானத்தின் மூலம் இந்த நிலைக்கு மேலும் சக்தி கொடுக்கலாம்.
அறிவியல் ஆய்வாளர்கள் நம் மூளையின் செயல்பாட்டை அறிய பல ஆய்வுகள் நடத்தி உள்ளனர். நம் மூளையானது அதன் செயல்பாட்டிற்கு ஏற்ப ஒரு குறிபிட்ட அலைவருசையில் மின் அதிர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டே இருக்கும்.இது EEG என்னும் கருவி மூலம் ஒரு வினாடிக்கு எத்தனை சைக்கிள் என்று கண்கிடபடுகிறது. மூளையானது ஒரு வினாடிக்கு 7 முதல் 14 சைக்கிள்கள் என்ற அளவில் அதன் அதிர்வுகள் இருந்தால் அது ஆல்பா நிலை எனப்படும்.

இந்த நிலை தூக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் இடைப்பட்ட நிலை ஆகும். இந்த நிலையில் இருக்கும் போது வழக்கமாக இயங்கும் இடது மூளையுடன் வலது மூளையும் செயல்பட துவங்கும். இந்த நிலை ஒரு மனிதனை மிகவும் சிறப்பாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்திக்க வைக்கிறது.
இந்த நிலை நம் ஆழ்மனதோடு தொடர்பு ஏற்படுத்தி ஆழ்மனத்தின் சக்தியை பயன்படுத்தி கொள்ள உதவி புரிகிறது. இந்த நிலையில் நாம் மனதில் நினைத்து பார்க்கும் அனைத்து நிகழ்வுகளும் மிக விரைவில் உண்மையாகும் வாய்பு உண்டு.
மேலும் ஆல்பா தியானத்தை தினமும் 15 நிமிடம் பழகி வர நம் மூளையின் நியாபக சக்தி மற்றும் அறிவு திறமை அதிகமாகும்.